வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சூரி. முதல் படத்திலேயே பரோட்டா காமெடி மூலம் புகழ்பெற்றதால் இவர் பரோட்டா சூரி என பெயர் பெற்றார்.
தொடர்ந்து அதிகமான காமெடி படங்களில் நடித்து வந்த சூரி தற்போது கதாநாயகனாக நடிக்கும் அளவு வளர்ந்து விட்டார்.
வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியான நிலையில் அனைவருக்கும் சூரி நன்றி தெரிவித்துள்ளார். என் வாழ்வின் முக்கிய தருணத்தை ஏற்படுத்தி கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் அய்யா இசைஞானி, தயாரிப்பாளர் எல்ரெட்குமார் ஆகிய அனைவருக்கும் நன்றி என கூறினார்.
என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏர்படுத்திக்குடுத்த இயக்குனர் @VetriMaaran அண்ணனுக்கும் இசைஞானி ஐயா #ilaiyarajasir அவர்களுக்கும் @elredkumar சாருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்🙏
புதிய பரிமாணத்தில் மாமா @VijaySethuOffl இனைவதில் மகிழ்ச்சி❤️😊@VelrajR @mani_rsinfo @rsinfotainment pic.twitter.com/9vJdWtglI0— Actor Soori (@sooriofficial) April 22, 2021

