Latest News
சூலூர் இன்ஸ்பெக்டருக்கு முதல்வர் பாராட்டு
கோவை மாவட்டம் சூலுர் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் திரு மாதய்யன். இவர் சமீபத்தில் சூலூர் நகரப்பகுதிகளில் இரவு ரோந்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது மோட்டார் பைக்குகளை திருடும் இரு திருடர்களை விரட்டி சென்றார். அவர்களை விரட்டி சென்று ஒருவரிடம் சினிமா பாணியில் சண்டையிட்டு சட்டை எல்லாம் கிழிந்து அவரை பிடித்தார்.
பிடிபட்ட திருடன் இராமநாதபுரத்தை சேர்ந்தவன் மற்றொரு திருடன் தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் இப்படி வீர தீர செயல் செய்ததற்காக இன்ஸ்பெக்டர் மாதய்யனை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினார்.
அவர்களின் கடமையுணர்வுக்கும் துணிவுக்கும் எனது பாராட்டுகளை நேரில் தெரிவித்து உள்ளார்.
