நடிகர் சோனு சூட்டை சில நாட்களுக்கு முன் யாருக்கும் பெரிதாக தெரிந்து இருக்காது. இவ்வளவிற்கும் தமிழில் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தவர் இவர் தமிழில் அருந்ததி படத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.
வில்லனான இவருக்குள் இவ்வளவு உயர்ந்த மனித நேயம் இருக்கும் என யாரும் நினைத்து பார்த்திருக்காத வண்ணம் பல உதவிகளை செய்தவர் இவர்.
கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்கு உதவினார். ஒரு சிறிய கவர்மெண்ட் போல தனிப்பட்ட முறையில் பல நிறைந்த உதவிகளை செய்தார் இவர்.
இவருக்கு சமீபத்தில் ஐநாவில் மனித நேயவிருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த சூழலில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய பரிந்துரையில், சோனுவை பஞ்சாபின் மாநில அடையாள சின்னமாக நியமிக்க வேண்டும் என பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜூ கேட்டு கொண்டுள்ளார். அத்துடன் தேர்தல் ஆணையம் சார்பிலும் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.