ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்

ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சோனு சூட்

நடிகர் சோனு சூட். சிலருக்கு மட்டுமே தெரிந்த சோனு சூட் சில நாட்களாக இந்தியா முழுவதும் தெரிந்த பிரபலம் ஆனார் அதற்கு காரணம் இந்தியா முழுவதும் கடந்த கொரோனா லாக் டவுன் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேடி தேடி சென்று உதவி செய்ததுதான்.

இவர் பலரால் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறார். ஆந்திராவில் உள்ள ஒரு கிராமத்தில் இவருக்கு சிலை வைத்து கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹைதரபாத்தில் சாலையோர உணவகம் வைத்துள்ள தன் ரசிகர் ஒருவர் கடைக்கு சென்றது மட்டுமல்லாமல் கடையில் அவருக்கு சிறிது நேரம் உதவியும் செய்துள்ளார்.