மனித நேயர் நடிகர் சோனு சூட்டுடன் சரத்குமார் சந்திப்பு

மனித நேயர் நடிகர் சோனு சூட்டுடன் சரத்குமார் சந்திப்பு

பிரபல ஹிந்தி நடிகர் சோனு சூட் இவர் சந்திரமுகி, கள்ளழகர்,நெஞ்சினிலே,சந்தித்த வேளை, மஜ்னு உள்ளிட்ட பல தமிழ் படங்களில் வில்லனாக நடித்துள்ளார். பல ஹிந்தி படங்களில் வில்லனாக நடித்துள்ள இவர் உண்மையில் வில்லன் அல்ல இவர் ஒரு ஹீரோ. ஏனென்றால் கடந்த 6 மாத கொரோனாவில் இவர் தன் சொத்தில் பாதியை விற்று மிகப்பெரும் உதவிகளை செய்தவர்.

ஊருக்கு செல்ல முடியாத பலருக்காக உதவி செய்தவர். பஸ்கள் வேன்கள் மூலம் பலரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பியவர்.

இந்த கொரோனா காலங்களில் அதிகப்படியான உதவிகள் செய்த பிரபலம் என்றால் அது இவர்தான் என அடித்துக்கூறலாம்.

இவருக்கு மனிதநேயர் விருதையும் சமீபத்தில் ஐநா வழங்கியது. இந்நிலையில் இவரை நடிகர் சரத்குமார் சந்தித்து பேசியுள்ளார். தன்னுடைய நீண்ட கால நண்பரை சந்தித்து பேசியது மகிழ்ச்சி என சரத்குமார் கூறியுள்ளார்.