சோனு சூட் புகைப்படம் விமானத்தில்- பாராட்டு தெரிவித்த காஜல்

சோனு சூட் புகைப்படம் விமானத்தில்- பாராட்டு தெரிவித்த காஜல்

தமிழில் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர் சோனு சூட். ஆனால் வில்லனாக நடித்த இவர் மனிதாபிமானத்துடன் கடந்த கொரோனா காலத்தில் நடந்து கொண்டது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் நீண்ட தூரம் நடந்து சென்ற பலருக்கு உதவினார். அவர்களை வாகனங்களில் ஊருக்கு அனுப்பி விடும் முயற்சியை மேற்கொண்டார். எல்லோருக்கும் பண உதவி பொருள் உதவி அதிகம் செய்தார். தனது சொத்தை விற்றுக்கூட அவர் உதவி செய்ததில் அவரது மனிதாபிமானம் போற்றப்பட்டது.

இந்நிலையில் அவரது மனிதாபிமானத்தை போற்றி ஐநா கூட விருது வழங்கியது. தற்போது அவரது புகைப்படத்தை ஸ்பைஸ் ஜெட் தனது விமானத்தில் முழுவதும் வரைந்து அவரை கெளரவப்படுத்தியுள்ளது.

இதை பார்த்த நடிகை காஜல் அகர்வால் சோனு சூட்டை வெகுவாக பாராட்டியுள்ளார்.