தூங்க சொன்ன தாய்… தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயன்ற மகன்..

341

இரவு நேரமாகி விட்டது தூங்கு எனக்கூறியை தாயை அவரின் மகன் கொலை செய்ய முயன்ற சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் ஆத்திக்குளம் என்ற இடத்தில் வசித்தி வருபவர் பார்வதி. இவரின் மகன் செந்தில் குமார். இவர் திருமணமாகி விட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். எனவே, கடந்த 8 மாதங்களாக தனது தாய் பார்வதியுடன் செந்தில் குமார் வசித்து வந்தார்.

நேற்று நள்ளிரவு வெகுநேரமாகியும் செந்தில்குமார் தூங்காமல் இருந்துள்ளார். எனவே, அவரை தூங்கும் படி தாய் திட்டியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் பார்வதி தூங்க சென்றுவிட்டார்.

ஆனாலும், ஆத்திரம் தீராத செந்தில்குமார் தாய் பர்வதியின் தலையில் ஒரு பெரிய கல்லை எடுத்து வந்து போட்டுள்ளார். இதில் பார்வதி படுகாயமடைந்தார். எனவே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாயை மகனே கொலை செய்ய முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாருங்க:  தெலுங்கு நடிகர் வேணு மாதவ் திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்
Previous article7 பெண்களை திருமணம் செய்த போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது : சென்னையில் அதிர்ச்சி
Next articleவெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் – சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த கமல் பேட்டி