கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் விதமாக ரஜினி அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கினார்.
கொரோனா காரணமாக சினிமாத் துறையே முடங்கியுள்ள நிலையில் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வண்ணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நலிந்த தயாரிப்பாளர்கள் 750 பேருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரிசி உள்பட நிவாரணப் பொருட்களை வழங்கினார். இதை அவர் முன்னணி தயாரிப்பாளர் கே ராஜனின் வேண்டுகோளை ஏற்று செய்தார்.
ஆனால் ரஜினியின் இந்த செயலுக்கும் தயாரிப்பாளர்கள் சிலர் விமர்சனம் செய்துள்ளனர். அதில் ‘தயாரிப்பாளர்கள் என்பவர்கள் முதலாளிகள். நடிகர்கள் அவர்களிடம் வேலை பார்ப்பவர்கள். தயாரிப்பாளர் என்ற முதலாளிகளுக்கு நடிகர் என்ற வேலைக்காரர் நிவாரணம் அளிப்பதா?. ’ என சில தயாரிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் கொடுப்பதென்றால் 50,000 அல்லது ஒரு லட்சம் பணமாகக் கொடுக்கவேண்டும், அவர்களை இப்படி சாப்பாட்டுக்காக கையேந்த வைப்பதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் ரஜினி ரசிகர்களோ ரஜினி என்ன செய்தாலும் அதற்கு விமர்சனம் சொல்ல இப்படி ஒரு கூட்டம் கிளம்பி வரும் என அந்த விமர்சனத்தை நிராகரித்துள்ளனர்.