Latest News
இன்று சோமவார பிரதோஷம்
மாதத்தின் ஒவ்வொரு அமாவாசை ஒவ்வொரு பவுர்ணமி தினத்துக்கு இரண்டு நாளுக்கு முன் வரும் விசேட நிகழ்வுதான் பிரதோஷம். சிவன் கோவில்களில் சிவனுக்கு நந்திக்கும் மாலை 4.30 முதல் 6 மணி வரை அபிசேகம் அலங்காரம் நடக்கும் பின்பு ஸ்வாமி புறப்பாடு பல்லக்கில் கோவிலுக்குள்ளே நடைபெறும்.
சிவன் கோவில்களில் நடக்கும் அனைத்து பிரதோஷ நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு ஸ்வாமியை வணங்கி வந்தால் வாழ்க்கை தடைகள் அனைத்தும் விலகும்.
தீராத தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை. அதிலும் பிரதோஷம் தோன்றிய நாளாக கூறப்படும் சனிக்கிழமை வரும் சனிப்பிரதோஷமும் திங்கட்கிழமை வரும் சோமவாரபிரதோஷமும் முக்கிய பிரதோஷங்களாகும்.
இன்று சோமவார பிரதோஷமாகும் இன்றைய தினம் கொரோனா கட்டுப்பாட்டால் கோவில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் வீட்டில் இருந்தே சிவனை வணங்கி அவன் ஆசியை பெறுவோம்.