Latest News
சமூகவலைதளம் பக்கம் அதிகம் போகவேண்டாம்- அண்ணாமலை அறிவுரை
பெரம்பலூர் அன்னை சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரிகளின், கல்லூரி நாள் விழா, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய மாநில பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைதான் இவ்வாறு பேசியுள்ளார்.
மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேறனும்னா சமூக வலைதளங்களில் ஒரு நாளைக்கு 10 நிமிடத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது. சாதனை மனிதர்களாக உருவாக வேண்டும். சமூக ஊடகத்தில் அதிக நேரம் இருந்தால் ஞானம் வராது என அண்ணாமலை பேசியுள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, நான் சமூக வலைதளத்தில் அதிகம் இருக்கிறேன் என்றால் அரசியல்ல இருப்பதால் என்னை போன்றவர்கள் சமூக வலைதளத்தில் முழுதாக இருக்க வேண்டிய நிலை உள்ளது என அண்ணாமலை கூறியுள்ளார்.