cinema news
சேரனுக்கு நன்றி தெரிவித்த ஸ்னேகன்
தமிழ் சினிமாவில் முன்னணி கவிஞராக ஜொலிப்பவர் ஸ்னேகன். கமல்ஹாசன் கட்சியான மய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஸ்னேகன், கவிஞர் அரசியல்வாதி ஒரு பக்கம் என்றாலும் பிக்பாஸ் மூலம் அதிக புகழ்பெற்றார் இவர்.
இந்நிலையில் நடிகர் சேரனை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்து டுவிட் இட்டுள்ளார் ஸ்னேகன்.
அதில் கடந்த 19வருடங்களுக்கு முன்னால் பாண்டவர் பூமி படத்தில் சேரன் என்னை அறிமுகப்படுத்தினார். திரைக்கு வந்து நான் 19 வருடமாகிறது பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்ற ‘அவரவர் வாழ்க்கையில் என்ற பாடல் மூலமாக இயக்குனர் சேரன் அவர்ளால் இந்த திரையுலகிற்கு நான் அறிமுகமாகி இன்றோடு 19 வருடங்களாகிறது. எப்போதும் என் நன்றி இவருக்கு உண்டு என இவர் கூறியுள்ளார்.
பாண்டவர் பூமி படத்தில் இடம்பெற்ற 'அவரவர் வாழ்க்கையில் என்ற பாடல் மூலமாக இயக்குனர் சேரன் அவர்ளால் இந்த திரையுலகிற்கு நான் அறிமுகமாகி இன்றோடு 19 வருடங்களாகிறது. எப்போதும் என் நன்றி இவருக்கு உண்டு… pic.twitter.com/vb66np555Y
— Snekan S (@KavingarSnekan) September 22, 2020