ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள ஒரு மருத்துவமனை குறித்து பேசி அது சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில் இப்போது அந்த மருத்துவமனையில் பாம்புகள் பிடிபட்டுள்ளன.
கடந்த மாதம் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ஜோதிகா மக்கள் கோவில்களைக் காட்டிலும் பள்ளி கல்லூரிகளுக்கு அதிக கவனம் செலுத்தாதது குறித்து பேசியிருந்தார். அவரது பேச்சில் ‘நான் படப்ப்டிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்தபோது பிரகதீஸ்வரர் கோவிலுக்கு சென்றேன். அந்த கோவில் பெரும் பொருட் செலவில் பராமரிக்கப்படுகிறது. ஆனால் அருகில் இருந்த மருத்துவமனை பராமரிப்பின்றி மோசமாக இருப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் கோவில்களுக்கு ஏராளமான செலவுகளை செய்வதை காட்டிலும் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செலவு செய்ய வேண்டும்’ என கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜோதியாக சுட்டிக்காட்டிப் பேசிய தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில், இன்று ஒரு ஊழியரை பாம்பு கடித்துள்ளது. இதனையடுத்து, அவருக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்த 10 க்கும் மேற்பட்ட பாம்புகளை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
இந்த செய்தியால் இப்போது சமூகவலைதளங்களில் ஜோதிகாவுக்கு மீண்டும் ஆதரவு பெருகி வருகிறது.