Entertainment
2030ல் ஸ்மார்ட்ஃபோன் வேஸ்ட்- 6 ஜி தொழில்நுட்பத்துடன் உடலே மொபைல் ஆக போகிறது
ஆரம்பத்தில் மொபைல் போனை பார்த்த உடன் அதிசயமாக இருக்கும்.பரவாயில்லையே எங்கிருந்தும் யாருடனும் பேச முடிகிறதே என ஆச்சரியமாக இருக்கும். செங்கல் கல் சைஸ் உள்ள மொபைல் ஃபோனின் விலை தாறுமாறான விலையாக இருந்தது.
அதன் பின்னர் வந்த நோக்கியாவின் 3310, 1100 போன்ற மொபைல் ஃபோன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்தது. அதையும் தாண்டி பிறகு சாதாரண கலர் மொபைல்கள் விற்பனைக்கு வந்தது.
அதன் பிறகு கேமரா மொபைல், எம்.பி 3 பாடல் கேட்குற மொபைல்னு நிறைய வந்தது.அதையெல்லாம் தூக்கி சாப்பிடுற மாதிரி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு ஸ்மார் ஃபோன் வந்தது.
ஸ்மார்ட்ஃபோன்ல டிக் டாக்ல ஆடலாம், ஸ்ம்யூல்ல பாடலாம், வேண்டிய மருந்துகளை வீட்டுக்கே வரவைக்கலாம், ஜொமட்டோ, ஸ்விகி ஆப்களில் வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்யலாம் என எல்லாவற்றையும் அனைத்தையும் எளிதாக்கி விட்டது.
இந்த ஸ்மார்ஃபோன் மார்க்கெட் 10 வருடத்திற்கும் மேலாக அப்படியே இருந்து வருகிறது.இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் 2030 ல் சுத்தமாக போய்விடுமாம். அப்போது இருக்கும் 6ஜி தொழில்நுட்பத்தின் மூலம் பல விசயங்களை நமது உடலிலேயே கட்டமைக்கும் நிலை உருவாகலாம் என நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் சி.இ.ஓ பெக்கா லண்ட் மார்க் இதனை தெரிவித்துள்ளார்.