Latest News
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டி என்ற இடம் உள்ளது . இங்கு தெருவில் சில சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அதில் ஒருவன் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக தெரிகிறது.
இதனால் கோபமடைந்த பொதுமக்கள் அவனை பிடித்து மின்சார கம்பத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
விசாரணையில் அவன் தேனி அல்லிநகரம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பது தெரியவந்தது.
காயமடைந்த அவனை போலீஸார் மீட்டு சிகிச்சைக்கு பிறகு வழக்குப்பதிவு செய்தனர்.
