சிறுவனை குணப்படுத்திய பிகில் திரைப்படம்

சிறுவனை குணப்படுத்திய பிகில் திரைப்படம்

தமிழ் சினிமாவில் விஜய்க்கு சிறுவர்களில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை நிறைய ரசிகர்கள் உண்டு .

சமீபத்தில் விஜய்யின் வெறித்தனமான ரசிக சிறுவன் ஒருவன் பிகில் படத்தால் குணமடைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த சசிவர்ஷன் (10), தனது உறவினர் அரவிந்த் என்பவருடன் பைக்கில் சென்றபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது சசிவர்ஷன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த சிறுவன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், தையல் போட்டு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். அதனால், சிறுவனுக்கு முதலில் வலித் தெரியாமல் இருக்க ஊசி போடுவதற்காக டாக்டர்கள் முயன்றனர். ஆனால் சிறுவன் பயத்தில் அடம்பிடித்து, சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை.

அப்போது மருத்துவமனை பணியாளர் ஜின்னா என்பவர் அந்த சிறுவனிடம் பேசி அவருக்கு விஜய் பிடிக்கும் என்பதை அறிந்து கொண்டார். இதனை தொடர்ந்து ஜின்னா, தனது செல்போனில் இருந்தந் விஜய்யின் ‘பிகில்’ படத்தை போட்டு சிறுவனை அமைதிப்படுத்தியுள்ளார்.

அந்த சிறுவன் தலையில் ரத்தம் வழிந்த நிலையிலும், மெய் மறந்து பார்த்துக்கொண்டிருந்தான். அந்த சமயத்தில், டாக்டர்கள், சிறுவனுக்கு வலி தெரியாமல் இருக்க ஊசி மூலம் மருந்து செலுத்தியுடன், தையல் போட்டு சிகிச்சையும் அளித்தனர். இது  மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படியும் வெறி பிடித்த ரசிகர்கள் இருப்பார்களா என ஆச்சரியமாகத்தான் உள்ளது.