இன்றைய நவீன உலகில் கம்ப்யூட்டர், செல்ஃபோன் போன்றவைகளை அடிக்கடி பார்க்கிறோம்.
எந்த வேலையாக இருந்தாலும் சரி கம்ப்யூட்டரிலேயே வேலை பார்க்கிறோம்.
அரசு அலுவலகங்களிலும் சரி பெரிய பெரிய சாஃப்ட்வேர் கம்பெனிகளிலும் கம்ப்யூட்டர் இல்லாமல் இன்று இல்லை.
அது போல மாறி விட்ட உணவு முறைகள், நேரம் தவறி தூங்குவது, மன அழுத்தம் போன்ற பல விசயங்களால் தூக்கம் என்பதே பலருக்கு வருவதில்லை.
தூக்கம் வருவதற்கு உள்ள ஒரு மருந்து பற்றி பார்ப்போம்.
அன்றாடம் உணவில் சேரும் ஒரு பொருள்தான் கசகசா. அசைவ உணவுகள், குழம்புகளில் கசகசா சேர்க்காமல் இருப்பதில்லை. அந்த கசகசாவை வாங்கி மிக்ஸியில் போட்டு நன்றாக மாவாக அரைத்து கொள்ள வேண்டும். எளிதில் இது அரைபடாது அதனால் தண்ணீர் ஊற்றி அவ்வப்போது தேவைக்கு அரைத்து தினம் தோறும் பாலில் கலந்து குடித்து வாருங்கள் தூக்கம் வருவதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.