சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத்தில் தமிழில் அறிமுகமானவர் கல்யாணி பிரியதர்ஷன். இவர் இயக்குனர் பிரியதர்ஷனின் மகளாவார். தற்போது மோகன்லால் மகனுடன் ப்ரணவ் ஜோடியாக ஹ்ருதயம் என்ற படத்தில் நடித்துள்ளார்.இவர் ஸ்கை டைவிங்கில் அசத்தியுள்ளார்.
கொரோனாவால் ஊரடங்கு போடப்பட்டு அந்த விதிகள் எல்லாம் தளர்த்திய நிலையில் ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார். தான் ஸ்கை டைவிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள கல்யாணி உள்ள அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன் என்ற முதல் மரியாதை பாடலையும் உவமையாக கூறியுள்ளார்.