Entertainment
அஜீத் கொடுத்த முதல் கார் பற்றி எஸ்.ஜே சூர்யா
அஜீத்தை வைத்து வாலி படத்தை இயக்கியவர் எஸ்.ஜே சூர்யா.இவர் இயக்கிய வாலி படம் நல்லதொரு வெற்றிப்படம். வாலி படத்தை பார்த்து மகிழ்ந்த அஜீத் சூர்யாவிடம் உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என கேட்டாராம் உங்களுக்கு என்ன கலரோ அதே கலர் தான் என எஸ்.ஜே சூர்யா சொல்ல, எனக்கு ஒயிட் பிடிக்கும் என ஒயிட் கலர் சாண்ட்ரோ காரை அஜீத் பரிசாக எஸ்.ஜே சூர்யாவுக்கு வழங்கியுள்ளார்.
அப்போ டிரைவிங் சரிவர தெரியாத சூர்யா அந்த காரை எடுத்து ஒரு காம்பவுண்ட் வால்ல இடிச்சுட்டாராம். அப்புறம் அஜீத்துக்கு தெரிந்த மெக்கானிக் ஒருவர்தான் எஸ்.ஜே சூர்யாவுக்கு டிரைவிங் சொல்லி கொடுத்தாராம்.
இதை நகைச்சுவையாகவும் சுவையாகவும் எஸ்.ஜே சூர்யா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
