Entertainment
மீண்டும் இயக்குனராக உருவாகும் எஸ்.ஜே சூர்யா
பாண்டியராஜன் நடித்து இயக்கிய நெத்தி அடி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் எஸ்.ஜே சூர்யா. சினிமாவில் உதவி இயக்குனராக இயக்குனர் வசந்திடம் பணியாற்றினார்.
ஆசை படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில் அதில் ஹீரோவாக நடித்த அஜீத்தின் நட்பு மூலம் வாலி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அந்த பட ஹிட்டின் மூலம் விஜயை இயக்கும் குஷி பட வாய்ப்பும் வந்தது.
நியூ, அன்பே ஆருயிரே போன்ற படங்களை இயக்கினார். 7 ஆண்டுகளுக்கு முன் இசை என்ற படத்தை இயக்கினார் இந்த படத்துக்கு பிறகு தற்போது ஒரு படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்க இருக்கிறார்.
இப்படத்தின் கதைக்களம் கார் என்று சொல்லப்படுகிறது. காரை மையமாக வைத்து இப்படம் இயக்கப்பட இருக்கிறது.
நடிகர் நடிகைகள் தேர்வு விரைவில் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
