Published
10 months agoon
நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பட்டார். இந்த படத்தில் அனைத்து காட்சிகளிலும் கலகலப்பாக நடித்திருந்தாலும் ஒரே காட்சியான புரோட்டா சாப்பிடும் காட்சியில் நடித்ததன் மூலம் புரோட்டா சூரி என பிரபலமானார்.
மிகவும் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த சூரி இன்று முன்னணி காமெடி நடிகராக சினிமாவில் இருந்து வருகிறார். இந்த நிலையில் காமெடி நடிப்பில் இருந்து முன்னேற்றமாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக சூரி சிக்ஸ்பேக் வைத்து நடித்துள்ளார்.
இந்த சிக்ஸ்பேக் படங்களை வெளியிட்டு சூரி கூறி இருப்பதாவது, இன்றைய வலி நாளைய வெற்றி என சூரி கூறியுள்ளார்.
The Pain of today is the victory of tomorrow 💪🏋️👍#gym #gymmotivation #gymlife #soori #Soori #sooricomedy #kollywood #tamil pic.twitter.com/YUbvoD4y8i
— Actor Soori (@sooriofficial) May 29, 2022