cinema news
நடன இயக்குனர் சிவசங்கருக்கு கொரொனா- மகன் கேட்கும் உதவி
இயக்குனர் பாலாவின் சேது, அஜீத்தின் வரலாறு, பாகுபலி உள்ளிட்ட பல படங்களுக்கு நடன இயக்கம் செய்தவர் டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர்.
இவர் பல படங்களில் அசாத்திய நடன அசைவுகளை அமைத்து பல நடிகர்களின் நடன திறமைகளை முன்னுக்கு கொண்டு வந்தவர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கும் இவர் ஹைதராபாத் ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது மூத்த மகன் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இளைய மகன் அஜய் கிருஷ்ணா உடன் இருந்து கவனித்து வருகிறார்
இவர்களுக்கு மருத்துவ உதவிக்கு பணம் தேவை என சமூக வலைதளங்கள் மூலமாக கேட்டு வருகிறார்.