திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை. இந்த கோவிலில் சிவவாக்கிய சித்தர் இருந்ததாக வரலாறு உண்டு.
இந்த கோவிலில் உள்ள இறைவன் முருகன் பக்தர்கள் யாராவது ஒருவர் கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளை சொல்லிவிட்டு மறைந்து விடுவதும் அந்த பக்தர் கோவிலில் வந்து அனுமதி கேட்டு பூக்கட்டி உத்தரவு கேட்டு அந்த பக்தர் சொன்னது உண்மை என்றால் அந்த பக்தர் சொன்ன பொருள் சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். இப்படி செய்வதன் மூலம் அந்த பொருளால் ஏற்படும் எதிர்மறையான விசயங்கள் அழிந்தும், நேர்மறையான விசயம் என்றால் அந்த விசயம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
சில நாட்களுக்கு முன் தான் போகர் சித்தரின் புகைப்படம் வைத்து பூஜை செய்யப்பட்டது.
இந்த நிலையில் எலுமிச்சை, விபூதி வைத்து வணங்க ஒரு பக்தரின் கனவில் உத்தரவு வந்ததால் தற்போது குறுகிய நாட்களுக்குள் போகர் படம் மாற்றப்பட்டு எலுமிச்சை, விபூதி ஆகியவை பூஜைக்கு வைக்கப்பட்டுள்ளன.