திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில்.சிவவாக்கிய சித்தர் தங்கி இருந்து பூஜித்த தலம் இது. இங்குள்ள முருகனின் சிறப்பு என்ன என்றால் தனது பக்தர் யாருடைய கனவில் சென்று ஏதாவது ஒரு பொருளை வைத்து பூஜை செய்ய சொல்வார். அப்படி பூஜை செய்ய சொல்லும் பொருளால் உலக அளவில் ஏற்படும் அல்லது ஏற்பட்டு கொண்டிருக்கும் விளைவுகளில் இருந்து முருகன் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை,
மஞ்சள் வைத்து பூஜை செய்தபோது மஞ்சள் விலை ஏற்றமானது இறங்கியது, சுனாமி வந்தபோது தண்ணீர் வைத்து பூஜை செய்தபோது சுனாமி ஏற்பட்ட நேரம் அதனால் ஏற்பட இருந்த பெரும் விளைவுகள் தடுக்கப்பட்டன.
இப்படியாக தற்போது மாங்கல்யம் வைத்து பூஜை செய்வதால் உலக அளவில் கடந்த சில நாட்களாக ஏற்படும் மரணங்கள் குறைந்து எங்கும் அமைதி நிலவும். பெண்கள் மாங்கல்ய பலத்துடன் இருப்பார்கள் என பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
அடுத்த பக்தர் தான் கனவில் ஒரு பொருளை கண்டதாக சொல்லும் வரை தற்போது வைத்துள்ள பொருளுக்கு பூஜை தொடரும்.