cinema news
சிவகார்த்திகேயனுக்கு வலைவிரிக்கும் தெலுங்கு சினிமா! சம்மதிப்பாரா?
தெலுங்கில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் பவன் கல்யான் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிக்கும் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு வந்துள்ளது.
அரசியலில் இறங்கியதால் சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த பவன் மீண்டும் படத்தில் நடிப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தி மற்றும் தமிழில் உருவான பிங்க் மற்றும் நேர்கொண்ட பார்வையாக உருவான படத்தின் தெலுங்கு பதிப்பில் வன் கல்யான் நடிக்க இருக்கிறார். தமிழில் தயாரித்த போனி கபூரே வேறு ஒரு முக்கிய தயாரிப்பாளரோடு இணைந்து இந்த படத்தையும் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு வக்கீல் சாப் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் வானம் படத்தின் இயக்குனர் கிரிஷ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் பொருட்டு பல மொழி கலைஞர்கள் அதில் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. இதனால் தமிழில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.