நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு

நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு- வருமான வரித்துறையின் பதில் மனு

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் தங்களை நீக்கக் கோரி வருமானவரித்துறை மனு அளித்துள்ளது.

மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி ரூ.4 கோடியை கொடுக்கும் வரை நடிகர்கள் விக்ரம் மற்றும் சிம்பு படங்களில் முதலீடு செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு தடை விதிக்க கோரி நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தற்போது இந்த வழக்கில் ஞானவேல்ராஜா, சிவகார்த்திகேயன் விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இந்த வழக்கில் இருந்து தங்களை நீக்கக் கோரி வருமான வரித்துறை பதில் மனு அளித்துள்ளது.