சிவகார்த்திகேயனின் அடுத்த படம் அதிரடி அறிவிப்பு

20

சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது என நேற்றுதான் அதிரடி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் லைகா நிறுவனத்துடன் தான் என  சொல்லப்பட்ட நிலையில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் 19 வது திரைப்படம் “டான்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

லைகா புரொடக்சன்ஸுடன் இந்த படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இந்த படத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகனே கதாநாயகியாக நடிக்கிறார். சூரி இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து காமெடி செய்கிறார்.

எஸ்.ஜே சூர்யா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

பாருங்க:  கொரொனா பாதிப்பு அதிகரிப்பால், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு - சென்னை மாவட்ட ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை!!