cinema news
சிவகார்த்திகேயன் படக்குழுவினருக்கு வருவாய்த்துறை அபராதம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் என்ற திரைப்படம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற படப்பிடிப்பின்போது அதிக கூட்டம் கூடியதாலும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மாஸ்க் அணியாமல் பலர் ஒன்று கூடியதாலும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் குறிப்பிட்ட இடத்தில் படப்பிடிப்பு நடத்த உரிய அனுமதி பெறாததால் வருவாய்த்துறையினர் படத்தின் இயக்குனர் சிபிக்கு 19000 ரூபாய் அபராதம் விதித்தனர்.