Entertainment
சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் குவியும் வாழ்த்து
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். இந்த நிகழ்ச்சி இவரது வளர்ச்சிக்கு அதிகம் உதவியது. அந்த நிகழ்ச்சியின் முதல் பம்பர் பரிசான 5 லட்சத்தை வென்று டைட்டில் வின்னர் ஆனார் இவர்.
தொடர்ந்து விஜய் டிவியிலேயே நிகழ்ச்சிகள் செய்து வந்த சிவகார்த்திகேயனின் கிராஃப் எகிறியது. இந்த நேரத்தில் மெரினா பட வாய்ப்பு வர அதில் கதாநாயகனாக நடித்தார்.
தொடர்ந்து இவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் இவரது சினிமா லைஃபை எங்கோ கொண்டு சென்று விட்டது.
எல்லா முன்னணி நடிகைகளுடன் மிக விரைவிலேயே ஜோடி சேர்ந்த சிவகார்த்திகேயன் தான் யார் என்பதை நிரூபித்து சினிமா உலகில் முன்னணி ஹீரோவாக ஜொலித்து வருகிறார். இன்று அவருக்கு பிறந்த நாள் என்பதால் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
