சிவகார்த்திகேயனுக்கு ஆண் குழந்தை- நெகிழ்ச்சி

18

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்ட்டட் ஹீரோ ஆகி விட்டார். மிகவும் கஷ்டப்பட்டு வந்தவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி இவரை பிரபலப்படுத்த அடுத்தடுத்த வாய்ப்புகளை அவரே உருவாக்கி கொண்டார் சிவா. சிவகார்த்திகேயன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர் ஆவார் அவரது தந்தை திருச்சியில் ஜெயிலராக இருந்தவராவார்.

சிவாவுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது இந்நிலையில் புதிதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது இக்குழந்தை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள சிவா

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி அம்மாவும் குழந்தையும் நலம் என பதிவிட்டுள்ளார்.

 

பாருங்க:  மீண்டும் ஒரு நிர்பயா - உத்திரப்பிரதேச கோரம் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தல்
Previous articleகாதல் கோட்டை படத்தின் 25ம் ஆண்டு விழா
Next articleஇன்று வெளியாகும் சார்பட்டா டிரெய்லர்