Latest News
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை பேட்டி எடுத்த அந்தக்கால பிரபலங்கள்- அரிதான வீடியோ
சேட்டிலைட் சேனல்கள் வருவதற்கு முன் தூர்தர்ஷன் தான் டாப்பில் இருந்தது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கலக்கலான சிறப்பு நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனில் 80ஸ் 90ஸ் கிட்ஸ் பார்த்து ரசித்திருப்பார்கள் அப்படிப்பட்டவர்களுக்கு பழைய விசயங்களை ஞாபகப்படுத்தும் வகையில் ஒரு வீடியோவை தூர்தர்ஷனின் பொதிகை சேனல் சில வாரங்கள் முன் வெளியிட்டிருக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜிகணேசனை கமல், ராதிகா, சுகாசினி, ராதா ஆகியோர் பேட்டி எடுக்கும் அரிதான வீடியோதான் அது.
இந்த வீடியோவை 3 லட்சத்துக்கும் அதிகமான 80ஸ் கிட்ஸ்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
