Latest News
நகராட்சி நிர்வாக இயக்குனரை எதிர்த்து பேசியதால் சிவகங்கை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்
தென்மாவட்டங்களை சேர்ந்த நகராட்சி ஆணையர்களுக்கான நகராட்சி ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா இந்த ஆய்வை நடத்தினார்.
காணொளி வாயிலாக நடந்த இந்த ஆய்வில் நிர்வாக இயக்குனர் பொன்னையா சிவகங்கை நகராட்சி ஆணையரை அவதூறாக குறிப்பிட்டாராம். இந்த அவதூறுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கூட்டம் முடிந்த சில நிமிடங்களில் அவசர, அவசரமாக சிவகங்கை நகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொறுப்பு ஆணையராக நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி நியமிக்கப்பட்டார்.