மீண்டும் இணையும் சிவா மனசுல சக்தி கூட்டணி

மீண்டும் இணையும் சிவா மனசுல சக்தி கூட்டணி

கடந்த 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம். சிவா மனசுல சக்தி இப்படத்தை ராஜேஸ் எம் இயக்கி இருந்தார். ஜீவா, அனுயா சந்தானம் நடித்திருந்தனர். இப்படத்தில் ஜீவா, சந்தானம் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் புகழ்பெற்றன.

இப்படத்தின் வெற்றிக்கு காமெடி காட்சிகளே முக்கிய காரணம் ஆகும். இந்த படத்துக்கு பின் ராஜேஸ் எம் முன்னணி இயக்குனரானார். ஆனால் அதற்கு பின் இவர் இயக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்களை தவிர இவர் கதை எதுவும் போணியாகவில்லை.

இந்த நிலையில் சிவா மனசுல சக்தி படத்தில் நடித்த ஜீவாவிடமே ராஜேஸ் கதை சொல்லி இருக்கிறாராம்.

அதற்காக நடிகர் ஜீவாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜேஷ் கூறிய கதை நடிகர் ஜீவாவிற்கு பிடித்துப் போக, அவரும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றனர் எனினும் இப்படத்தில் சந்தானம் நடிப்பாரா என்பது தெரியவில்லை.