சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இருக்கும் கியாரா அத்வானி

தமிழில் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் தனது கலைப்பயணத்தை துவக்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த பல படங்கள் ஆரம்பத்தில் இருந்தே தாறுமாறு ஹிட் அடித்து வரும் நிலையில் புதிய படங்களாக இவருக்கு குவிந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் தவிர்க்க முடியாத நடிகராக முன்னணி நடிகராக இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியான டான் திரைப்படமும் அவருக்கு நல்ல பிரேக்கை கொடுத்துள்ளது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படம், மற்றும் மண்டேலா இயக்குனர்  மடோன் அஸ்வின் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார்.

இதில் மண்டேலா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் பிரபல ஹிந்தி மற்றும் தெலுங்கு நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறார் என தெரிகிறது.