Tamil Flash News
ஸ்லிப்பாகும் சிறுத்தை சிவா?…ராஜாவுடன் மெகா கூட்டணி போடப் போகும் அஜீத் குமார்…
“குட் பேட் அட்லி” படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்டது என்ற ஒரு மிகப்பெரிய சாதனையையும் படைத்துள்ளது. நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்து வருமா?, வராதா? என கேள்விக்குறியாகவே இருந்து கொண்டிருக்கும் “விடாமுயற்சி” படத்தினுடைய படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாகவும் தகவல்கள் வருகிறது.
தனது ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இரட்டிப்பான மகிழ்ச்சியை கொடுத்துள்ள அஜீத் குமார், தனது 64 ஆவது படத்தை பற்றிய சிந்தனையிலும் இறங்கிவிட்டாராம். படம் பக்கா கமர்ஷியலாகத்தான் இருக்க வேண்டும் என்பதுவே அஜீத்தின் நினைப்பாக கூட இருக்கலாம். சமீபத்தில் அஜீத்தை வைத்து தொடர்ச்சியாக கமர்ஷியல் வெற்றிகளை கொடுத்தவர் “சிறுத்தை” சிவா.
வீரம்,விவேகம்,விஸ்வாசம்,படங்களை இயக்கிய சிவாவுடன் மீண்டும் கூட்டணி வைக்கலாம் என யோசித்து அவருக்கு வாய்ப்பு கொடுக்க தயாராக இருந்திருக்கிறாராம் அஜீத் குமார். “துணிவு” படம் துவங்கும் போதே இந்த இருவரும் நான்காவது முறையாக மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிவாவோ இந்தி படம் ஒன்றில் கமிட்டாகி இருப்பதால் அஜீத் குமார் கேட்கும் நேரத்திற்கு கால்ஷீட் ஒதுக்க முடியுமா? என்று குழப்பம் நீடித்தே வருகிறதாம்.’எடிட்டர்’ மோகனின் மகனும், ஜெயம் ரவியின் அண்ணனுமான மோகன் ராஜா, அஜீத்தை சந்தித்து பேசி இருக்கிறார்.
அப்பொழுது ஒரு கதையை அஜீத்திடம் சொல்ல, அஜீத்துக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதாம். அதனால் சிவாவிற்கு அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுக்கலாமா? எனவும், அதற்கு முன்னர் மோகன் ராஜாவின் படத்தில் நடிக்கலாமா? எனவும் அஜீத் யோசித்து வருவதாக ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.