Entertainment
சிறுத்தை சிவா வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அண்ணாத்தே. இப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு தீபாவளியன்று வெளிவந்தது.
இப்படம் வசூல்ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக பெரும் விமர்சனத்திற்குள்ளானது.
படம் ஓவர் சென்டிமெண்டாக இருப்பதாக கூறப்பட்டது.
சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு பெரும் விருந்தானது.
இந்நிலையில் சிறுத்தை சிவா வீட்டுக்கு இன்று சென்ற ரஜினிகாந்த் அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து பாராட்டியுள்ளார்.
