கமலை வைத்து ராஜபார்வை, பேசும் படம், மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா உள்ளிட்ட கமலின் சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் சிங்கிதம் சீனிவாசராவ்.
கமலின் 100வது படமான ராஜபார்வையையும் கமலின் முக்கியமான படமான அபூர்வ சகோதரர்கள் படத்தையும் சிங்கிதம் சீனிவாசராவே இயக்கியுள்ளார்.
பேசும்படம் என்ற வித்தியாசமானதொரு மெளனப்படத்தையும் கமலை வைத்து இயக்கியுள்ளார்.
பிரபு நடிக்க சின்ன வாத்தியார் படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இவருக்கு கடந்த 9ம்தேதி கொரோனா தொற்று உறுதியானது. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்.
இதை கூறியுள்ள சிங்கிதம் சீனிவாசராவ் நான் அனைத்து எச்சரிக்கைகளை கடைபிடித்தும் கொரோனா வந்து விட்டது. மனித குலம் இதில் இருந்து மீளவேண்டும் என அவர் கூறியுள்ளார்.