எண்பதுகளில் இளையராஜா அறிமுகப்படுத்திய பாடகர்களில் மகத்தான பாடகர் ரமேஷ் அவர்கள். கன்னடத்தில் அதிக பாடல்கள் பாடியவர் பாடகர் ரமேஷ் இவரை தமிழில் தன் படங்களில் பாடவைத்தவர் இளையராஜா.
இவரின் குரல் பாடகர் மனோவின் குரல் போலவே இருக்கும் என்பதால் இவரின் குரல் மனோவின் குரல் எனவே பலரும் நினைத்து கொண்டிருப்பர். அப்படியல்லாது இவரின் குரலில் மிகுந்த தனித்துவமும் ஒரு குழைவும் இருக்கும்.
இளையராஜா இசையில் இவர் ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் பாடிய ராதே என் ராதே பாடலை இன்றும் பலரும் மிக ரசித்து கேட்கும் ஒரு ரொமாண்டிக்கான பாடல் ஆகும். பகல் நிலவு படத்தில் இடம்பெற்ற வாராயோ வான்மதி , அம்பிகை நேரில் வந்தாள் படத்தில் இடம்பெற்ற கன்னித்தேனே இவள் மானே, உன்னை தேடி வருவேன் படத்தில் இடம்பெற்ற ஒரு நாளில் வளர்ந்தேனே, அமுதகானம் படத்தில் இடம்பெற்ற வெள்ளிநிலா பதுமை உள்ளிட்ட சில பாடல்கள் இவரின் பெயரை சொல்லும்.
தமிழ் சினிமாவில் மிக அதிக பாடல்களை பாடி பெரிய ரவுண்ட் அடித்திருக்ககூடிய பாடகர் ரமேஷ் இளம் வயதிலேயே இறந்து போனார். அவரின் பாடல்கள் இன்றளவும் இளையராஜா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.