சில மாதங்கள் உலகம் முழுவதும் டிக் டாக் என்ற அப்ளிக்கேசனின் மோகம் தலைவிரித்தாடியது. குறிப்பாக தமிழ்நாட்டில் டிக் டாக் தான் வாழ்க்கை என நிறைய பேர் வாழ்ந்தனர். எந்த நேரமும் அதில் வீடியோ போடுவது , டான்ஸ் ஆடுவது என வாழ்க்கையை கழித்தனர்.
இந்த அப்ளிகேசன் சீன ஆப் என்பதால் இதில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்த அப்ளிகேசனை இந்திய அரசு தடை செய்தது. இதனால் டிக் டாக் வாசிகள் சாப்பாடே இல்லாமல் சோகத்தில் மூழ்கும் அளவுக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில் இதற்கு பதிலாக இந்தியர்கள் உருவாக்கிய சிங்காரி அப்ளிகேசனை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இந்த அப்ளிகேசன் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது வரை சுமார் 38 மில்லியன் தடவைகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக நாள்தோறும் 96 மில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்படுவதாகவும், கடந்த 45 நாட்களில் மாத்திரம் 2.6 பில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.