விஐபி படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இந்த படத்திற்கு பிறகு புகழ்பெற்ற சிம்ரனின் மார்க்கெட் 2000த்துக்கு பிறகு வரை தமிழ் சினிமாவை ஒரு கை பார்த்தது.
வெறும் கவர்ச்சியோடு மட்டுமல்லாமல் நல்ல நடிப்புத்திறனையும் வெளிப்படுத்தக்கூடியவர் சிம்ரன்.
துள்ளாத மனமும் துள்ளும், வாலி போன்ற பல படங்கள் சிம்ரனின் நல்ல நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கின. எல்லா முன்னணி நடிகர்களுடன் மார்க்கெட் இருந்த காலத்தில் நடித்த சிம்ரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அந்த நேரத்தில் நடிக்கவில்லை. இருப்பினும் பேட்ட படத்தின் சில காட்சிகளில் நடித்ததன் மூலம் அதை சரி செய்து கொண்டார்.
திரையுலகின் முடிசூடா ராணியாக விளங்கிய சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.