ஊரடங்கிலும் உடற்பயிற்சி செய்வேன்! சிம்பு ரகளை!

ஊரடங்கிலும் உடற்பயிற்சி செய்வேன்! சிம்பு ரகளை!

நடிகர் சிம்பு தனது வீட்டுக்குள்ளாகவே உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே இப்போது வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளன. கொரோனா இல்லாத் போது கூட  வீட்டை விட்டு வெளியே வராதவர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் சிம்பு. இந்நிலையில் இப்போது சிம்புவின் வழியைதான் எல்லோரும் பின்பற்ற வேண்டும் என சமூகவலைதளங்களில் அவரைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளங்களை நிரப்பின.

இந்நிலையில் நடிகர் சிம்பு வீட்டை சுற்றியே ஜாக்கிங் செய்து வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்கிறார். சிம்புவை பழைய மன்மதனை போன்று பார்க்கவேண்டும் என அவரது ரசிகர்கள் அனைவரையும் கோரிக்கை வைத்து உடல் எடையை குறைக்க வலியுறுத்தி வந்தனர். இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் இதனை ஏற்றுள்ள  சிம்பு குறிப்பிட்ட நாட்களில் ஸ்லிம் ஃபிட் ஆக கடுமையாக முயற்சித்து வருகிறார். எனவே அவர் தற்போது நடித்து வரும் மாநாடு படத்தில் மன்மதன் போன்ற சிம்புவை மீண்டும் காணலாம். இந்த வீடியோவை அவரது மக்கள் தொடர்பாளரான டைமண்ட் பாபு சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.