பாம்பு சிம்பு வம்பு

பாம்பு சிம்பு வம்பு

சிம்பு என்றாலே வம்பு என்றாகி விட்டது அவரே நல்ல முறையில் இருந்தாலும் இந்த சமுதாயம் அவரை இருக்கவிடாது என்று நினைக்க வேண்டி உள்ளது. அந்தக்காலத்தில் ராமநாராயணன் படங்களில் தேவர் படங்களிலும் பாம்புகளை வைத்து சாதாரணமாக படம் இயக்கி கொண்டிருந்தனர்.

பின்பு வனவிலங்கு சட்டங்கள் கடுமையானதால் இது போல பாம்புகளை சினிமாக்களில் கையாள உரிய அனுமதி பெற வேண்டும் என்று சட்டம் உள்ளது.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வர இருக்கும் ஈஸ்வரன் பட போஸ்டர் வெளியானது இதில் சிம்பு கையில் பாம்பு வைத்திருக்கும் போலி என சிலர் கருத்துக்களை தெரிவித்ததால் சிம்பு உண்மையிலேயே பாம்பை பிடித்தார் என காண்பிப்பதற்காக ஒரிஜினல் பாம்பை சாக்குக்குள் இருந்து சிம்பு பிடிக்கும் காட்சியை படக்குழு வெளியிட்டது.

இதை பார்த்த சிலர்  சிம்பு பிடிப்பதற்காக பாம்பின் வாய் தைக்கப்பட்டிருப்பதாக கூறினர். இந்த வீடியோவை பார்த்த சென்னையை சேர்ந்த விலங்கு ஆர்வலர் ஒருவர் வனத்துறையிடம் ஆன்லைனில் புகார் தந்துள்ளார்.. இதைதவிர, இந்திய விலங்குகள் நல வாரியத்திலும் தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாம்.. அந்த புகார் மனுவில், வீடியோவில் இருக்கும் பாம்பை பார்த்தால் போலியாக இல்லை.. நிஜமான பாம்பு போலவே இருக்கிறது.. பாம்புக்கு  போதைமருந்து தரப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது விலங்குகள் நலவாரியத்துக்கும் இந்த புகார் சென்றுள்ளது.