சிம்புவுக்கு சம்மன்

சிம்புவுக்கு சம்மன்

நடிகர் சிம்பு என்றாலே வம்பு என்று ஒரு காலத்தில் இருந்தது. நிறைய சர்ச்சைகள் எப்போதும் வெடித்துக்கொண்டே இருக்கும். நயன் தாரா, ஹன்சிகா உடனான காதல்களில் இவரது பெயர் அடிபட்டுக்கொண்டே இருந்தது. அந்த விவகாரங்கள் ஓய்ந்த பிறகு சிம்பு ஷூட்டிங் வரமாட்டேன் என்கிறார் என்ற வழக்குகள் அதிகம் வந்தது. பின்பு அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்காக அந்த பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்பு மீது பகிரங்கமாகவே பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார், திடீரென சிம்பு பீஃப் சாங் பாடிவிட்டார் என பிரச்சினை எழுந்தது, சிம்பு மாநாடு படத்தில் நடிக்க சொதப்புகிறார் என பிரச்சினை எழுந்தது அதுவும் சரியான நிலையில் கொரோனா வந்தது.

இந்நிலையில் சிம்பு அவசர அதிரடியாக மிக வேகமாக ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டார் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வர இருக்கும் ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சிம்பு பாம்புவோடு போஸ் கொடுத்த ஸ்டில் வைரலானது. பின்பு சிம்பு பாம்பை சாக்குக்குள் இருந்து பிடித்து தன் தோளில் போட்டது போல வீடியோ வெளியானது.

இது வனத்துறை கவனத்துக்கு சென்றதால் தேனாம்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் இருந்து சிம்புவுக்கு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.