cinema news
சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் அப்டேட்
சிம்பு நடிப்பில் ஏற்கனவே விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை இயக்கியுள்ளார் இயக்குனர் கெளதம் மேனன். இவர் தற்போது சிம்புவை வைத்து நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தை இயக்க இருக்கிறார் இப்படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்களை எழுதுகிறார்.
கரோனா அச்சுறுத்தலால் இதன் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் உள்ளது. தற்போது சென்னையில் இதன் படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
முதற்கட்டப் படப்பிடிப்பு 10 நாட்கள் மட்டுமே நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது சிம்புவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.