நடிகர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தீவிர ஆன்மிகப்பற்றுடையவர். சிவனை விரும்பி கும்பிடுபவர் அதே போல் ஜோதிடத்தின் மீதும் தீவிர நம்பிக்கை கொண்டவர்.அதே போல் நடிகர் சிம்புவுவை பார்க்க ஒரு பக்கம் ப்ளே பாய் போல தோன்றினாலும் இன்னொரு பக்கம் அவரும் ஆன்மிக பற்றுடையவர் என்பதை அறிய முடிகிறது.
சில வருடங்களாக திருமணம் நடக்காதது, சரியான படங்கள் இல்லாதது போன்ற குழப்பங்கள் சிம்புவை சூழ்ந்திருக்கும் நிலையில், தற்போதைய கொடூர கொரோனா காலத்தில் அனைவரும் மனநிம்மதி இழந்திருக்கும் இந்த சூழ்நிலையில் நடிகர் சிம்பு கோவில் கோவிலாக சுவாமி தரிசனம் செய்து வருகின்றார்.
நேற்று திருப்பதி சென்று தரிசனம் செய்த சிம்பு இன்று மதுரை வந்து மதுரையில் உள்ள புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மாஸ்க் அணிந்த நிலையில் அவரை சிவாச்சாரியார் ஒருவர் சாமி தரிசனம் செய்வித்து அழைத்து செல்லும் புகைப்படம் வெளியாகியுள்ளது.