Connect with us

மீண்டும் சிம்பு கெளதம் மேனன் கூட்டணி

Latest News

மீண்டும் சிம்பு கெளதம் மேனன் கூட்டணி

மின்னலே , காக்க காக்க படத்திற்கு பிறகு கெளதம் மேனனுக்கு பெரிய அளவில் அவர் இயக்கி பேசப்பட்ட படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மானின் இசை அந்த படத்திற்கு பக்கபலமாக இருந்தது. இதில் சிம்பு த்ரிஷா நடித்திருந்தனர்.

இது காதல் படம் என்றாலும் அடுத்ததாக அச்சம் என்பது மடமையடா எனும் அதிரடி படத்தையும் கெளதம் மேனன் செய்தார். இதில் சிம்பு காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

தற்போது சிம்புவும் கெளதம் மேனனும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கின்றனர் இதற்கும் ஏ.ஆர் ரஹ்மான் இசை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நேற்று இயக்குநர் கவுதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு “நதிகளிலே நீராடும் சூரியன்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு, கவுதம் மேனன் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளனர்.

பாருங்க:  சசிக்குமார் படத்தின் தலைப்புக்கு சிக்கல்

More in Latest News

To Top