Entertainment
சிம்பு வழக்கு- நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி
நடிகர் சிம்பு நடித்த திரைப்படம் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் இந்த படத்தை தயாரித்தவர் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
இவர் அன்பானவன் அசராதவன் படம் குறித்தும் அதில் நடித்த சிம்புவை பற்றியும் பல குறைகளை சொல்லி பேட்டியளித்திருந்தார்.
இந்த படம் தோல்வியடைந்ததால் 8 கோடி சம்பளம் பேசப்பட்ட நிலையில் வெறும் 1 அரை கோடி சம்பளம் மட்டுமே கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிம்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்புவை பற்றி நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
மேலும் சிம்பு உயர்நீதிமன்றத்தில் தனக்கு 1கோடி தர வேண்டும் என மைக்கேல் ராயப்பன் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இதில் எதிர்மனுதாரராக நடிகர் சங்கதலைவர் விஷாலையும் சிம்பு சேர்த்திருந்தார்.
இதற்கிடையே விஷால் அளித்த மனுவில் நடிகர் சங்கங்களுக்கு பிரதிநிதிகள் உள்ளதால் தான் தலையிட முடியாது என பதில் அளித்திருந்தார்.
இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
