இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாள்

19

டி.ராஜேந்தர் இயக்கிய உறவைக்காத்த கிளி படத்தில் 6 மாத குழந்தையாக அறிமுகமானவர் சிம்பு. பின்பு என் தங்கை கல்யாணி,  சம்சார சங்கீதம், எங்க வீட்டு வேலன் உள்ளிட்ட டி. ஆர் இயக்கிய பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

சிறுவயதிலேயே சினிமாவுக்குரிய அனைத்தையும் கற்று தேறினார் பின்பு சில வருடங்கள் நடிக்காமல் இருந்த சிம்பு, மீசை அரும்பிய பருவத்தில் மோனிஷா என் மோனலிஷா படத்தில் பாடல் காட்சியில் மட்டும் நடித்தார்.

2001ல் டி.ஆர் இயக்கிய காதல் அழிவதில்லை படத்தில் கதாநாயகன் ஆக அறிமுகமானார். இது தோல்விப்படம் என்றாலும் பின்பு தம், குத்து என பல ஆக்சன் படங்களில் நடித்து முன்னணி நடிகர் ஆனார்.

பின்பு வந்த மன்மதன், கோவில், உள்ளிட்ட படங்கள் இவரை மேலும் முன்னணியில் உயர்த்தின. சினிமாவில் பல சர்ச்சைகள் இவர் மீது வந்தாலும் அனைத்தையும் தகர்த்து முன்னணி நடிகராக இவர் ஜொலிக்கிறார். இன்று இவரது பிறந்த நாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

https://twitter.com/rparthiepan/status/1356623465407606785?s=20

பாருங்க:  அமெரிக்காவை விடாத கொரோனா! பலி எண்ணிக்கை இவ்வளவா?