சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக தயாரிக்கும் சித்ரா லட்சுமணன்

சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக தயாரிக்கும் சித்ரா லட்சுமணன்

பிரபலமான தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் அந்தக்காலத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். அதற்கு முன்பு பத்திரிக்கையாளராகவும் இருந்தவர் இவர். பின்பு மண்வாசனை, ஜல்லிக்கட்டு, வாழ்க்கை போன்ற படங்களை தயாரிக்கவும் செய்தார் இவர். தற்போது டூரிங் டாக்கீஸ் என்ற சேனலை நடத்தி வரும் இவர் அதன் மூலம் ஏராளமான சினிமா பிரபலங்களின் அறியாத மறுபக்கத்தை கொண்டு வருகிறார்.

தற்போது இவர் நடிகை சில்க்ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை தாங்கி அவள் அப்படித்தான் என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிக்க பல நடிகைகளும் புதுமுக நடிகைகளும் ஆர்வம் காட்டுகிறார்களாம் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடிப்பதற்கு போட்டி அதிகம் இருப்பதால் விரைவில் யார் சில்க் ஸ்மிதாவாக நடிக்கிறார் என்பதை தேர்வு செய்து அறிவிக்க இருக்கிறார்களாம்.