Published
11 months agoon
இன்று உலகம் முழுவதும் சிவகார்த்திகேயன் நடிப்பில் டான் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு என உள்ள ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் சத்தமில்லாமல் ஒரு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதுதான் சிபிராஜ் நடித்துள்ள ரங்கா திரைப்படம். இந்த திரைப்படத்தில், சிபிராஜ் , நிகிலா விமல் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் தயாரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இந்த படத்தை வினோத் என்பவர் இயக்கியுள்ளார். சிபிராஜுக்கு இந்த படம் பிரேக் ஆக அமையுமா என தெரியவில்லை.
சிபிராஜ் நடிப்பில் விரைவில் மாயோன் படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இன்று ரங்கா படமும் ரிலீஸ் ஆகியுள்ளது. நீண்ட நாள் ரிலீஸ் ஆகாமல் இருந்த படம் என்பதால் இந்த படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.