அனல் பறக்கும் ஆக்‌ஷன் திரில்லர்… தெறிக்க விடும் சிபிராஜ்.. ரங்கா டீசர் வீடியோ

223

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் ஆக்‌ஷன் திரைப்படமான ரங்கா படத்தில் டீசர் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

சத்தியராஜின் மகன் சிபிராஜுக்கு சரியான வெற்றி இதுவரை கிடைக்கவில்லை. நடுவில் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதுவும் பெரிய வெற்றியை எட்டவில்லை.

இந்நிலையில்தான், அவருக்கு திருப்புமுனையாக ரங்கா திரைப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் டீசர் வீடியோவை பார்க்கும் போது நம்மால் அதை உணர முடிகிறது. கிராமத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்து ஹனிமூனுக்காக ஒரு பனிப்பிரேதேசம் செல்லும் சிபிராஜ் அங்கு சந்திக்கும் பிரச்சனையே படத்தின் மூலக்கதையாகும். இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் நிச்சயம் சிபிராஜுக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாருங்க:  ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ்டர்